ADDED : ஜன 16, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : திண்டுக்கல்மாவட்டம் - கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் கல்லுாரி மாணவர்கள் நசீர் 21, கோகுல் 21, தவறி விழுந்து மாயமாயினர்.
கொடைக்கானல் மூஞ்சிகல்லை சேர்ந்த நாசர் மகன் நசீர்; ஆனந்தகிரியை சேர்ந்த கார்த்திக் மகன் கோகுல்.
கோவை தனியார் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவர்களான இவர்கள் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்தனர். நண்பர்களுடன் கொடைக்கானல் ஐந்து வீடு அருவிக்கு சென்றனர். ஆபத்தான பகுதிக்கு சென்ற இவர்கள் அங்கு தவறி விழுந்தனர். தீயணைப்புத் துறையினர் தேடினர். இன்று காலை மீண்டும் தேடும் பணி தொடரும் என தீயணைப்பு துறையினர் , கொடைக்கானல் போலீசார் தெரிவித்தனர்.

