ADDED : ஆக 04, 2026 01:55 AM

அ நிறம் | அளவு
பழநி: பழநி தண்டபாணி சுவாமி மடம் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் உதவி சார்பதிவாளர் பாலச்சந்தர், இளநிலை உதவியாளர் சிவசங்கரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிலையில், சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது. இந்நிலையில் உதவி சார்பதிவாளர் பாலச்சந்தர், இளநிலை உதவியாளர் சிவசங்கரி ஆகியோர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்தது பதிவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பத்திரப்பதிவுத்துறை தலைவர் அருள்சுந்தர் தயாளன் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
