/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்
/
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள்
ADDED : நவ 26, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ஒட்டன்சத்திரத்தில் நடந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2014 பிப். 18 மாலை 6:00 மணிக்கு ஆட்டோ டிரைவர்களான விருப்பாச்சி சேர்ந்த ராபர்ட் கென்னடி 45, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முனியப்பன் 54, மணிகண்டன் 55 ,ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.
முனியப்பன், மணிகண்டன் ஆகியோர் கத்தியால் ராபர்ட்கென்னடியை குத்தி கொலை செய்தனர். இதன் வழக்கு பழநி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் சிவகுமார் வாதாடினார். முனியப்பன், மணிகண்டன் ஆகியோருக்கு நீதிபதி மலர்விழி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

