ADDED : செப் 07, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
எரியோடு, செப்.8-
ஒட்டன்சத்திரம் சத்யா நகர் தனியார் நிதி நிறுவன ஊழியர் ராஜ்குமார் 35. எரியோடு பகுதியில் வசூல் பணி முடித்துவிட்டு நேற்று மதியம் 12:00 மணிக்கு டூவீலரில் திண்டுக்கல்லிற்கு புறப்பட்டார்.
குருக்களையன்பட்டி பகுதியில் சென்றபோது டூவீலரில் இருந்து தீப்பொறி கிளம்பி எரிய துவங்கியது. உடனே ரோட்டோரம் நிறுத்தி அப்பகுதி மக்கள் உதவியுடன் அணைக்க முயன்றார். ஆனால் தீ வேகமெடுத்து எரிய டூவீலர் முழுவதும் தீக்கிரையானது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த வேடசந்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர். ரோட்டில் இருந்து டூவீலரின் எஞ்சிய பாகங்களை அப்புறப்படுத்தினர். தீப்பற்றியது எப்படி என எரியோடு போலீசார் விசாரித்தனர்.
