ADDED : மார் 14, 2026 07:08 AM
திண்டுக்கல்: உலமாக்கள் டூவீலர் மானியம் பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் '' என, கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு டூவீலர் வாங்க அரசு சார்பில் வழங்கப்பட்ட மானியத் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டூவீலருக்கான மானியம் பெற கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிக்கு டூவீலர் வழங்க முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் சமர்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
