UPDATED : நவ 21, 2026 09:57 PM
ADDED : நவ 21, 2026 09:54 PM
அ நிறம் | அளவு
பழநி:
பழநி ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வடமாநில வாலிபர்கள் இருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். கேரளம் மாநிலம் பாலக்காடு, திருச்சூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதிக்கு செல்ல தட்கல் ரயில் டிக்கெட்களை வைத்திருந்தனர். பூர்த்தி செய்யப்படாத 2 முன்பதிவு விண்ணப்பங்களும் இருந்தன.
விசாரணையில் அசாம் மாநிலம் ரூபாஹி பகுதியைச் சேர்ந்த இஜா ஜூல்ஹக் 21, அமீர் உசேன் 19, என்பதும், தட்கல் முறையில் ரயில் டிக்கெட்களை பெற்று வேறு நபர்களுக்கு விற்பதும் தெரியவந்தது. இருவரையும் ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ரயில் டிக்கெட்கள், 2 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
