/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சென்னையில் ஜன.7 ல் உண்ணாவிரதம் தட்டச்சு பயிற்சி பள்ளி நிர்வாகிகள் அறிவிப்பு
/
சென்னையில் ஜன.7 ல் உண்ணாவிரதம் தட்டச்சு பயிற்சி பள்ளி நிர்வாகிகள் அறிவிப்பு
சென்னையில் ஜன.7 ல் உண்ணாவிரதம் தட்டச்சு பயிற்சி பள்ளி நிர்வாகிகள் அறிவிப்பு
சென்னையில் ஜன.7 ல் உண்ணாவிரதம் தட்டச்சு பயிற்சி பள்ளி நிர்வாகிகள் அறிவிப்பு
ADDED : ஜன 02, 2026 05:54 AM
பட்டிவீரன்பட்டி: அரசாணை 187ஐ நீக்க வலியுறுத்தி சென்னையில் ஜன.7 ல் தட்டச்சு பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 4500-க்கு மேற்பட்ட தட்டச்சு பயிலகங்கள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பயிலகங்கள் மூலம் ஆண்டுதோறும் 5 லட்சம் மாணவர்கள் தட்டச்சு, 2 லட்சம் பேர் சுருக்கெழுத்து, ஒரு லட்சம் பேர் அதிவேகத்தட்டச்சு, புதுமுக இளநிலை, அக்கவுண்டன்சி பாடங்களில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் சி.ஓ.ஏ., எனப்படும் கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வில் அரசு தேர்வுக்கு செல்வோர், அரசு பணியில் இருப்போர் பயின்று தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேற்கண்ட தேர்வுகள் ஆண்டுதோறும் இரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2025ல் அரசாணை எண் 187 தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. இதில் சி.ஓ.ஏ., எனப்படும் கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் தேர்வு தட்டச்சையும் இணைத்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, இத்தேர்வுக்கான தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக சி. ஓ. ஏ., தேர்வு எழுதுவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் தட்டச்சு பயிலகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி அவர்களது குடும்பம் பாதிக்கப்படும் என்பதால் ஜன.7ல் அனைத்து தட்டச்சு பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்ட அமைப்பாளர் சோமசங்கர் கூறியதாவது: புதிய அரசாணை மூலம் 4000க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிலகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தட்டச்சு இயந்திரங்களை பயன்படுத்தாமல் தட்டச்சு பயிற்சி செய்யாமல் சி.ஓ.ஏ., தேர்வு எப்படி எழுத முடியும்.
தட்டச்சு பயிலகங்கள் மூலம் பயிற்சி பெறாமல் சி. ஓ .ஏ., தேர்வுகளை எழுதுவது சாத்தியமற்றது. எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுவதால் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அரசாணை எண் 187ஐ முழுவதுமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் அறிவித்துள்ளோம் என்றார்.

