ADDED : ஆக 15, 2025 02:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிலுக்குவார்பட்டி சுவாமி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட தடகள போட்டிகள் நடந்தது.
பள்ளி நிர்வாகி சண்முகசுந்தரம் தேசிய கொடி ஏற்றினார். பள்ளிக் குழு தலைவர் அட்வகேட் விஷ்ணுவர்தன், குழு உறுப்பினர் பிரபு முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் முருகேசன், முன்னாள் ஆசிரியர் சரவணன் ஒலிம்பிக் கொடியை ஏற்றினர். தலைமை ஆசிரியர் அருள்செல்வ பிரகாசம் ஒலிம்பிக் சுடரை ஏற்றி போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜாராம் சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர் தாமஸ் ஸ்டீபன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.