தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொடரும் முன்னறிவிப்பற்ற மின்வெட்டு

தொடரும் முன்னறிவிப்பற்ற மின்வெட்டு

தொடரும் முன்னறிவிப்பற்ற மின்வெட்டு


ADDED : செப் 06, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பட்டி: செம்பட்டி, பிள்ளையார்நத்தம் துணை மின் நிலைய பகுதிகளில் நேற்று,முன்னறிவிப்பு இல்லாத மின்வெட்டு ஏற்பட்டதால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

சில நாட்களாக பகலில் அதிக வெப்பமான சூழல், பரவலாக நிலவுகிறது. ஆத்துார், சித்தையன்கோட்டை, செம்பட்டி, ஆதிலட்சுமிபுரம் சுற்றுப்புற கிராமங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வந்தது. புகார் எழுப்புவோரிடம், உள்ளூர் பழுது நீக்க பிரச்னைக்காக மின்தடை இருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.

பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும், ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு மணி நேர மின்வெட்டு தொடர்கிறது. வண்ணம்பட்டி, வீரக்கல், கரிசல்பட்டி, கோனுார், கசவனம்பட்டி, பழைய கன்னிவாடி, தருமத்துப்பட்டி, கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, மைலாப்பூர், அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு 7:00 மணியில் இருந்து மின்தடை ஏற்படுவதால், கிராமங்களில் மக்களின் அவதி தொடர்கிறது.

-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us