/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தோண்டப்பட்ட தெருக்களை சீரமையுங்க பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : ஜன 30, 2025 05:48 AM
வத்தலக்குண்டு: தோண்டப்பட்ட தெருக்களை  சீரமைக்க    வத்தலக்குண்டு பேரூராட்சி  பேரூராட்சி  கூட்டத்தில்  வலியுறுத்தப்பட்டது.
- இக்கூட்டம் தலைவர் சிதம்பரம் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சரவணக்குமார் வரவேற்றார். தலைமை எழுத்தர் முருகேசன் தீர்மானங்கள் வாசித்தார்.
கவுன்சிலர்கள் விவாதம்
தலைவர்: புதுப்பட்டி, காமராஜபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக   சமுதாய கூடத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  வருவாய் துறை ஒப்புதல் பெற்று பணிகள் துவங்கும்.
சின்னதுரை: அம்ருத் திட்டத்தில்  தோண்டப்பட்ட தெருக்களை  சீரமைக்க வேண்டும்.
தலைவர்:  நடவடிக்கை எடுக்கப்படும்.
சிவகுமார்: புதுப்பட்டி அரசு மாணவியர் விடுதி அருகே   வேளாண் குடியிருப்பு கட்டடங்கள்   புதர் மண்டி   உள்ளது.  இதை   பேரூராட்சி கையகப்படுத்த வேண்டும்.
தலைவர்: விதிமுறைப்படி செய்வோம்.
சைதத் நிஷா: விவேகானந்தர் நகர் பகுதி  சாக்கடைகளை துார்வார வேண்டும்.
செயல் அலுவலர்:   15 வது மானிய குழு நிதியிலிருந்து  சாக்கடை கட்டப்படும் என்றார்.