/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 01, 2025 07:33 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திஷா குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு திஷா குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. எம்.பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தார். கலெக்டர் சரவணன், எம்.எல்.ஏ,க்கள் காந்திராஜன், தேன்மொழி, டி.ஆர்.ஓ.,ஜெயபாரதி, மேயர் இளமதி, பயிற்சி கலெக்டர் வினோதினி கலந்துகொண்டனர்.கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டது.
காந்திராஜன் எம்.எல்.ஏ., பேசுகையில்,'' காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். சில இடங்களில் நீரேற்று நிலையங்களுக்கு மின் வசதி இல்லாமல் இருக்கிறது. மின்இணைப்பு கிடைத்தால்தான் குடிநீரை சுத்திகரித்து அதை மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கு பம்ப் செய்ய முடியும்,''என்றார்.
சச்சிதானந்தம் எம்.பி., பேசுகையில்,'' பழநி பள்ளிவாசல் அருகே உயர்கோபுர மின் விளக்கு திறப்பு விழா நடந்தும் மின்இணைப்பு வழங்கவில்லை ''என்றார்.