/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் தொடங்கியது வைகை இலக்கிய திருவிழா
/
திண்டுக்கல்லில் தொடங்கியது வைகை இலக்கிய திருவிழா
ADDED : ஜன 24, 2025 05:33 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் சார்பில் இரு நாட்கள் நடக்கும் வைகை இலக்கிய திருவிழா துவங்கியது.
வைகை இலக்கியத்திருவிழாவானது இரு ஆண்டுகளாக மதுரையில் நடந்து வந்த நிலையில் நடப்பாண்டில் திண்டுக்கல்லில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இவ்விழா திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நேற்று தொடங்கியது. பண்பாட்டரங்கம், வரலாற்றரங்கம் ஆகிய இரு அரங்கங்களுடன் 2 நாட்கள் நடக்க உள்ளன. புத்தகக் கண்காட்சி, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் புகைப்பட கண்காட்சி,ஓவிய கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை , இதோடு வினாடி வினா போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. இதை கலெக்டர் பூங்கொடி துவக்கி வைத்தார்.எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.பொது நுாலக இயக்ககம் இணை இயக்குநர் இளங்கோ சந்திரகுமார்,மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் கலந்து கொண்டனர்.

