UPDATED : மே 15, 2026 04:41 PM
ADDED : மே 15, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி முருகன் கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அங்குள்ள ஆனந்த விநாயகர் சன்னதி முன் கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடந்தது.
தொடர்ந்து கலச நீரால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருஆவினன்குடி பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பட்டத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
