ADDED : ஆக 24, 2026 07:22 PM
திண்டுக்கல், ஆக.25 -
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் தெற்கு ரத வீதி பஜனை மடம் அருகே முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 8ம் ஆண்டு நினைவு நாள், விடுதலை வீரர் குதிராம்போஸின் 118ம் ஆண்டு நினைவு நாள், சுதந்திர வீரர் ஒண்டிவீரனாரின் 255ம் ஆண்டு நினைவு நாள், ஆன்மிக ஒளி அரவிந்தரின் 155வது ஆண்டு பிறந்த நாள் விழா, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையின் நிறுவனர் டி.எஸ்.சவுந்தரத்தின் 123வது பிறந்த நாள் விழா நடந்தது.
மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மூத்தத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் ரமேஷ்பாண்டி வரவேற்றார். தேசிய வழக்கறிஞர் பெருமாள் பேசினார். இளைஞர் பிரிவுத் தலைவர் நாகரத்தின பாண்டி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல், ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் செய்திருந்தனர்.
