ADDED : மார் 19, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
கொடைரோடு: திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில் விவசாயி இடம் ரூ.4000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., சத்யா, புரோக்கர் சாந்தக்குமார் கைது செய்ப்பட்டனர்.
பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி குமார். தனது தந்தை கொடுத்த 55 சென்ட் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி சிட்டா, அடங்கல் பெற வி.ஏ.ஓ., சத்யாவை நாடினார். அவர் ரூ.5000 லஞ்சமாக கேட்க ரூ.4000 தர முடிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி வி.ஏ.ஓ., வால் நியமிக்கப்பட்ட புரோக்கர் சாந்தக்குமாரிடம் குமார் பணத்தை கொடுத்தார். டி.எஸ்.பி., நாகரஜன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் ரூ.4000 லஞ்சம் கேட்டது உறுதிசெய்யப்பட்டது.
