/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வி.ஏ.ஓ., ஆபிசிற்கு 18 ஆண்டுகளுக்கு பின் விடிவு
/
வி.ஏ.ஓ., ஆபிசிற்கு 18 ஆண்டுகளுக்கு பின் விடிவு
ADDED : ஜூலை 22, 2025 04:07 AM

வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக வடமதுரை வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் அனுமதி கிடைத்துள்ளது.
பஸ் ஸ்டாண்ட் அருகில் ஓடுகளான கூரையுடன் பழமையாக கட்டடத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் இயங்கியது. 2007 ல் கனமழை பாதிப்பால் அலுவலகத்தின் ஒரு பக்க சுவர் விழுந்த நிலையில் அலுவலகம் ரத வீதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு இடம் மாறியது.
அங்கன்வாடி, பள்ளி கட்டடங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கீடு செய்வது போல் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்திற்கு பணம் ஒதுக்க விதிமுறை இடம் தராததால், 18 ஆண்டுகளாக அவர்களாலும் நிதி தர முடியாமல் கிடப்பில் இருந்தது.
இதுதொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் பலனாக தற்போது பொதுப்பணித்துறை மூலம் புதிய கட்டடம் கட்ட முடிவாகி உள்ளது. இதற்காக பழைய கட்டடத்தை இடித்து அகற்றும் பணி துவங்கி உள்ளது.