ADDED : ஜன 24, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி வரதமாநதி அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
நீர்வளத்துறை அறிவிப்பு: பழநி வரதமாநதி அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி ஆயக்குடி பெரியகுளம், வீரகுளம், பாப்பன்குளம், மாப்பிள்ளை நாயக்கன் குளம், ஆயக்குடி பெரியவாய்க்கால், பாப்பான் வாய்க்கால், கோதை அணைகட்டு நேரடி வாய்க்கால் வாயிலாக பாசனம் பெறும் நிலங்களுக்கு, மார்ச் 21ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். இதனால் பழநி தாலுகாவில் உள்ள 3077 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
