ADDED : ஜன 05, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : தமிழகத்தில் புயல், மழை, வெள்ளத்தை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும். ரூ.21 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் மாவட்ட செயலாளர் மைதீன்பாவா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் திருவளவன்,கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முகம்,தெற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொது செயலாளர் வில்லவன் கோதை,துணைச் செயலாளர் உலகநம்பி,மண்டல துணை செயலாளர் அன்பரசு,மாநில துணை செயலாளர்கள் திருச்சித்தன்,தமிழ்முரசு,மண்டல துணைச் செயலாளர் ஜலால்முகமது,செய்தி தொடர்பாளர் சுவிட் ராஜா பங்கேற்றனர்.