தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 50 சதவீதம் குறைந்தது காய்கறி விலை

 50 சதவீதம் குறைந்தது காய்கறி விலை

 50 சதவீதம் குறைந்தது காய்கறி விலை


ADDED : ஜன 24, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் உழவர்சந்தைக்கு வரத்து அதிகரித்த நிலையில் தக்காளி, வெண்பூசணி, கலர்பூசணி, பட்டர்பீன்ஸ், முருங்கை, வாழை இலை, மொச்சை, கேரட் என 8வகை காய்கறிகளின் விலை 50 சதவீதமாக குறைந்து விற்பனையானது.

ஜன.15ல் பொங்கல் பண்டிகை அன்று கிலோ தக்காளி கிலோ ரூ.60 என உழவர்சந்தையில் விற்பனையானது. நேற்று 50 சதவீதம் குறைந்து கிலோ ரூ.30க்கு விற்பனையானது. வெண்பூசணி ரூ.50க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.25, கலர் பூசணி கிலோ ரூ.30க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.20, நீர்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் ரூ.180க்கு விற்ற நிலையில் ரூ.100,முருங்கை கிலோ ரூ.360க்கு விற்பனையான நிலையில் ரூ.160 குறைந்து ரூ.200க்கு விற்பனையானது.

இதேபோல் வாழை இலை 5 தலைவாலை உள்ள ஒரு கட்டு ரூ.50க்கு விற்பனையானதில் நேற்று ரூ.30, ரூ.90க்கு விற்ற கேரட் ரூ.40, ரூ.90க்கு விற்ற பச்சை மொச்சை ரூ.50க்கு குறைந்து விற்பனையானது.

உழவர் சந்தை உதவி வேளாண் அலுவலர் சாபர்சாதிக் கூறியதாவது: பொங்கல் விடுமுறை என்பதால் அதற்கடுத்த வரும் நாட்களில் காய்கறி அறுவடை அதிகரித்து, வரத்து அதிகரிக்க தக்காளி, வெண்பூசணி, கலர்பூசணி, பட்டர்பீன்ஸ், முருங்கை, வாழை இலை, மொச்சை, கேரட் என 8 வகை காய்கறிகளின் விலை 50 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விலை ஒரு வாரம் நீடிக்கும்.

புவிசார் குறியீடு கொடைக்கானல் மன்னவனுார் பூண்டு வெளியில் கிலோ ரூ.420. உழவர் சந்தையில் கிலோ ரூ.160 குறைந்து ரூ.260க்கு விற்பனையாகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us