ADDED : மார் 17, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, அன்பளிப்பு வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட எல்லையில் உள்ள செக் போஸ்ட்களில் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப் படுகிறது.
அதன்படி வேடசந்துார் கல்வார்பட்டி நெடுஞ்சாலை செக் போஸ்டில் நிலைக்கண்காணிப்பு குழு அலுவலர் ரேணுகா, எஸ்.எஸ்.ஐ., விமலாமேரி உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
