/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
/
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்
ADDED : அக் 06, 2025 05:46 AM

ஒட்டன்சத்திரம் : மூலச்சத்திரம் பகுதியில் பாலம் கட்டும் பணி நடந்து வரும் நிலையில், தொடர் விடுமுறை காரணமாக அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் சென்றதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் - திண்டுக்கல் ரோட்டில் லெக்கையன்கோட்டை செம்மடைப்பட்டி இடையே பாலம் கட்டும் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் காரணமாக சில இடங்களில் எதிர் எதிராக வரும் வாகனங்கள் ஒரே ரோட்டில் பயணிக்கும் படி உள்ளது. வாகனங்கள் நெரிசல் இன்றி செல்லும் வகையில் சில இடங்களில் போதிய வசதி ஏற்படுத்தப்படவில்லை. விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாள் என்பதால், அதிகப்படியான வாகனங்கள் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோட்டில் செல்கின்றன. மேலும் நேற்று மாலை இப்பகுதியில் கனமழை பெய்ததால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. பல கிலோமீட்டர் வரை வாகனங்கள் நின்றதால் வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். ௫ மணி நேரத்திற்கும் மேலாக நெரிசல் நீடித்தது.
விடுமுறை நாட்களில் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வகையில் வழிவகைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.