/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஹல்காம் தாக்குதலுக்கு வி.ஹெச்.பி., கண்டனம்
/
பஹல்காம் தாக்குதலுக்கு வி.ஹெச்.பி., கண்டனம்
ADDED : ஏப் 26, 2025 03:55 AM
பழநி :   ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் ஏப்.,22  ல்  ஹிந்துக்களை தீவிரவாதிகள் படுகொலை செய்ததை   கண்டித்து தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் தென் தமிழ்நாடு மாநில தலைவர் ராமகிருஷ்ணன்,வட தமிழ்நாடு மாநில தலைவர் ஆண்டாள் பி சொக்கலிங்கம் அறிக்கை :    பாரத எல்லைக்கு அப்பால் இருந்து வந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான வன்முறை செயலுக்கு நமது பாரத தேசம் ஆயிரம் மடங்கு அதிக வலிமையுடன் பதில் அளிக்க வேண்டும். கடுமையான வன்முறைச் செயலுக்கு உடனடி எதிர்வினை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாரத மண்ணில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள், பாரதத்தில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் இருந்து அதிகாரிகளை வெளியேற்றியது, பாகிஸ்தானுடைய வர்த்தகத்தை நிறுத்தியது ஆகிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்கிறது.
தீவிரவாத பயிற்சி தளங்களை ஒழிக்கவும். இது போன்ற தொடர்ச்சியான கடுமையான வன்முறையை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான விரைவான வலுவான பதிலடியும் தொடர வேண்டும்.  தேசிய புலனாய்வு அகாடமி, புலனாய்வுத் துறைகள் கவனம் செலுத்தி நாட்டில் செயல்படும் பயங்கரவாதிகள் களை கையாள்பவர்களையும், ஆதரவாளர்களையும் ஒழிக்க வேண்டும். உள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு முழுஆதரவையும் வழங்க வேண்டும்.
கொடுமைகளை ஒழிக்கும் அரசின் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் வி.ஹெச்.பி., துணை நிற்கும்  என தெரிவித்துள்ளனர்.

