ADDED : ஜன 01, 2025 05:37 AM

குஜிலியம்பாறை : தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழா திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தே.மு.தி.க., சார்பில் கருங்கல் ஊராட்சி ஆணைபட்டியில் நடந்தது. குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.
பொருளாளர் புளியம்பட்டி திருமுருகன் முன்னிலை வகித்தார். அன்னதானத்தை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.சிவகுமார் துவக்கி வைத்தார். குஜிலியம்பாறை, வேடசந்துார், வடமதுரை,ஒட்டன்சத்திரம், பழநி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்துக்கு,அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. குஜிலியம்பாறை கருங்கல் ஆணைப்பட்டியில் நடந்த விழாவில் நிர்வாகிகள் கே.ஆர்.கே.காளியப்பன்,கல்யாணசுந்தரம், மாரியப்பன், பிரபு, கண்ணன், மகேஷ் பங்கேற்றனர்.
இதோடு திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் 16 வாகனங்களில் 500க்கு மேற்பட்டோர் சென்னை சென்று அஞ்சலி செலுத்தினர்.

