UPDATED : ஜூன் 17, 2026 07:06 PM
ADDED : ஜூன் 17, 2026 07:00 PM
வடமதுரை:தென்னம்பட்டியில் இருந்து பி.கொசவபட்டி கல் உடைக்கும் தொழிற்சாலைக்கு தினமும் பல லாரிகளில் பாறாங்கற்கள் கொண்டு செல்லப்படுகின்றன. குறுகலான கரட்டுப்பட்டி ரோட்டில் கனரக லாரிகள் வேகமாக செல்வதால் கற்கள் விழுகின்றன. கால்நடைகள் மீது மோதும் சம்பவங்கள் நடக்கின்றன. பள்ளி குழந்தைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
அதிருப்தியில் இருந்த கரட்டுப்பட்டி பகுதியினர் ஜூன் 16 இரவு அவ்வழியே கற்களை ஏற்றிச்சென்ற 5 லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை விடுவித்தனர்.
கிராம ரோடுகளை தவிர்த்து மெயின் ரோடுகள் வழியே லாரிகளை இயக்க அறிவுறுத்தினர். இரு மாதங்களுக்கு முன் இதே மாதிரி பிரச்னை இருந்த பக்கத்து கிராமமான கோட்டைப்பட்டியிலும் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.
