/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பொங்கலை கொண்டாடாத கிராமத்தினர்
/
பொங்கலை கொண்டாடாத கிராமத்தினர்
ADDED : ஜன 15, 2026 06:38 AM
குஜிலியம்பாறை: பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர் ஊராட்சியில் உள்ள ஆறேர் பாரப்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி, குள்ளம்பட்டி பகுதி மக்கள் கால்நடைகளுக்கான அம்மை பாதிப்பால் பொங்கலை கொண்டாடவில்லை .
பெரும்பாலான மக்கள் விவசாயம் ,கால்நடை வளர்ப்பு தொழிலை நம்பிவரும் நிலையில் தற்போது கால்நடைகளுக்கான அம்மை பாதிப்பு இப்பகுதியில் அதிகரித்துள்ளது. அம்மை பாதிப்பால் கால்நடைகளுக்கு கொப்புளங்கள் சரியாகாத நிலையில் அம்மன் மீது பாரத்தை போட்டு பொங்கலை தள்ளி வைத்து உள்ளனர்.
பாறைப்பட்டி விவசாயி வி.ராமசாமி கூறியதாவது: மாடுகளுக்கு அம்மை நோய் பாதிப்பு இன்னும் சரியாகவில்லை. மருத்துவத்துறையினர் நல்ல முறையில் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். இதேபோல் பாறைப்பட்டி, ஆட்டுக்காரன்பட்டி, குள்ளம்பட்டி பகுதியில் மாடுகளுக்கான அம்மை நோய் பாதிப்பு உள்ளதால் பொங்கல் விழாவை கொண்டாடவில்லை என்றார். மாவட்ட கால்நடை துறையினர் இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த முன் வர வேண்டும்.

