ADDED : செப் 10, 2026 01:02 AM

அ நிறம் | அளவு
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணி ஜூலை 20 முதல் நடந்து வருகிறது. இதையொட்டி இயந்திரங்கள் அனைத்தும் என்.டி.டி., சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகள் அடிப்படையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது.
தொடர்ந்து ரோப்கார் புதிய உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டு, பரிசோதனைகள் நடந்து கியர் பாக்ஸ் பொருத்தும் பணி நடக்கிறது.
செப்.,12க்குள் ரோப்கார் சேவையை மீண்டும் செயல்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய ரோப்கார் பெட்டிகள் கரூரில் இருந்து நேற்று மாலை வந்தடைந்தது.
அதனை ரோப்காரில் இணைக்க பணியாளர்கள் தயாராகி வருகின்றனர். இப்பணிகள் முடிந்ததும் சோதனை ஓட்டம் நடத்தி பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
