ADDED : ஜன 21, 2026 06:07 AM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.விவேகானந்தா கல்வி குழும தலைவர் கே.ரங்கசாமி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் கலந்து கொண்டனர்.
பத்து ,12 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 2ம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு , பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளி துணைத் தலைவர் கலைவாணி, வி.வி.எம் பள்ளி இயக்குனர் அருண் கீர்த்தி, பள்ளி முதல்வர் மகிபாலா, தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி கலந்து கொண்டனர்.
