ADDED : நவ 20, 2025 09:33 AM
வேடசந்துார்: வ.உ.சி., 89வது நினைவு நாளை முன்னிட்டு ஆத்து மேட்டில் அவரது உருவ படத்திற்கு மலர் மாலைகள் சூட்டப்பட்டது. வ.உ.சி., மக்கள் இயக்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ., காந்திராஜன், ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ரவிசங்கர், முருகவேல், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் பரமசிவம், பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், நகர செயலாளர் பாபு சேட், நிர்வாகிகள் சந்திரசேகர், பூக்கடை ஆறுமுகம், பா.ஜ., மாவட்ட தலைவர் ஜெயராமன், நிர்வாகிகள் சண்முகம், ராமர்,
பூபதி ராஜா, கோபால், காங்., வட்டார தலைவர் சதீஷ், தே.மு.தி.க., நிர்வாகிகள் சக்திவேல், பால்ராஜ், வேளாளப் பெருமக்கள் சங்க தலைவர் ஏழுமலை முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வில்லியம், வேல்முருகன், கவிதா முருகன், ஆறுமுகம், சிவலிங்கம், விஜயகுமார், சரவணகுமார் பங்கேற்றனர்.
பழநி : வ.உ.சி., மன்றத்தின் சார்பில் வ.உ.சி ., 89 வது நினைவு நாள் பழநியில் தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்றது.
இதை தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பழநி சண்முக நதியில் படித்துறை, முன்னோர்களுக்கு திதி கொடுக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் பாதாள சாக்கடை திட்ட பணியால் சேதமான சாலைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் சுந்தர் கலந்து கொண்டனர்.

