ADDED : செப் 03, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி, செப்.4-
பள்ளிகளுக்கான மண்டல கைப்பந்து போட்டிகளில் பங்கேற்கும் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட அணி வீராங்கனைகள் தேர்வு சின்னாளபட்டியில் நடந்தது. சேரன் வித்யாலயா பள்ளியில் நடந்த தேர்வு போட்டியில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரகமத்கனி தலைமை வகித்தார். சேரன் வித்யாலயா பள்ளி தாளாளர் சிவக்குமார், முதல்வர் திலகம் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி, விளையாட்டு திறன் அடிப்படையில் மாணவிகள் தேர்வு நடந்தது. மண்டலத்திற்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இருந்து 150 வீராங்கனைகள் திறனை வெளிப்படுத்தினர். வயது வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டது.
