வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
ADDED : நவ 19, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நாளை (நவ.21), நாளை மறுதினம் (நவ.22) காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்திற்கான முகாம்கள் நடக்க உள்ளன.
இம்முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜன.,4ல் வெளியிடப்படும்.
வாக்காளர்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை இடம் பெற செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் துர்கா தெரிவித்துள்ளார்.
