ADDED : ஏப் 15, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தித்திக்கும் தேர்தல் திருவிழா என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
600 மகளிர் சுயஉதவிக்குழுவினர் பொங்கல் வைத்து ரங்கோலி கோலங்கள் இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். கலெக்டர் முன் அனைத்துத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உறுதிமொழி ஏற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குநர்கள் சதீஸ்பாபு, கங்காதாரணி பங்கேற்றனர்.
