ADDED : மார் 25, 2026 06:57 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்பதிவு செய்ய வசதியாக படிவம் 12டி' வீடு வீடாக வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.
மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டளிப்பதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர், உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் வீட்டிலிருந்த படியே ஓட்டுப்பதிவு செய்திட படிவம் 12-D வழங்கி வாக்காளர்களின் சம்மதம் பெற நேற்று (மார்ச் 23) முதல் வாக்காளர்களின் இல்லம் தேடிச் சென்று படிவங்கள் வழங்கும் பணி துவங்க உள்ளன. அனைத்து மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களும் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்.
