தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஓட்டுப்பதிவு இயந்திர ஒதுக்கீட்டுப் பணி நிறைவு

 ஓட்டுப்பதிவு இயந்திர ஒதுக்கீட்டுப் பணி நிறைவு

 ஓட்டுப்பதிவு இயந்திர ஒதுக்கீட்டுப் பணி நிறைவு


ADDED : மார் 24, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: ஏழு தொகுதிகளில் தேர்தல் நாளன்று பயன்படுத்தக்கூடிய ஓட்டுப்பதிவு,கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ,ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வி.வி.,பேட் இயந்திரம் அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் தேர்தல் கமிஷன் இணையத்தளம் மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் ஒப் படைக்கப்பட்டன.

மாவட்டத்தில் 8299 ஒட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு, வி.வி.பேட்., இயந்திரங்கள் உள்ளன. இதில் திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் முதல் நிலை பரிசோதனையில் 197 இயந்திரங்கள் பழுதானவை என கண்டறிய தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டன. பழுதான இயந்திரங்கள் போக ஏழு தொகுதிகளுக்கான முதல் நிலை குலுக்கல் முறை ஒதுக்கீட்டிற்கு 9736 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்க தமிழக தேர்தல் கமிஷன் மூலம் சுழற்சி முறை ஒதுக்கீடு பணிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் நேற்று நடந்தது.

ஏழு தொகுதிகளில் உள்ள 2301 ஓட்டுச்சாவடிகளுக்கு 2758 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 2758 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட்., 2988 என 8504 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''ஓட்டுப்பதிவு, கட்டுப்பாடு இயந்திரங்கள் 20 சதவீதம், வி.வி.பேட்., இயந்திரங்கள் 30 சதவிதம் அதிகரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. கூடுதல் இயந்திரங்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தும் வகையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 1080, கட்டுப்பாடு இயந்திரங்கள் 61, வி.வி.பேட்.,91 என 1232 இயந்திரங்கள் தயார் நிலையில் மாவட்ட கிட்டங்கியில் பாதுகாப்பாக உள்ளது. தேவைபட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us