UPDATED : மே 17, 2026 08:41 PM
ADDED : மே 17, 2026 08:21 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில் முப்பெரும் விழா ரவுண்டு ரோடு டெபி வூசு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
மாவட்ட வூசு சங்க தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். கால்பந்து கழக மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி பேசினார்.
வூசு விளையாட்டுத் துறையின் கீழ் அரசு பணியில் சேர்ந்த சுவஸ்ரீ, விளையாட்டு இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லுாரியில் கால்நடை மருத்துவ படிப்பில் இடம் பெற்ற ஜீவா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவு பரிசு வழங்கப்பட்டது. செயலாளர் ஜாக்கி சங்கர், பொருளாளர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
