ADDED : மார் 29, 2026 05:26 PM

ஒட்டன்சத்திரம்: நவாமரத்துப்பட்டி விவேகானந்தர் வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விவேகானந்தா வித்யாலயா கல்வி குழுமங்களின் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தார். பள்ளி இயக்குனர் அருண்கீர்த்தி வரவேற்றார். முதல்வர் மகிபாலா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் தலைமை ஆசிரியர் சக்திவேல், கேந்திர வித்யாலயா பள்ளி முன்னாள் சீனியர் ரிசோர்ஸ் பர்சன் செல்லமுத்து பங்கேற்றனர். அவர்களை பள்ளி தலைவர் கவுரவித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
முன்னதாக மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, வி.வி.எம்., கிண்டர் கார்டன் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மணிமேகலை நன்றி கூறினார்.
