ADDED : நவ 19, 2026 08:42 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து துாய்மைப் பணியாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி வளாகத்தில் ஒப்பந்த பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்த காத்திருப்பு போராட்டம் துவங்கினர்.
இன்று (நவ.,19) இரண்டாவது நாளாக முற்றுகை போராட்டம் தொடர்ந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர்கள் காளிராஜ், அழகர்சாமி பேசினர். நிர்வாகிகள் தவக்குமார், மாரிமுத்து, வாறுகால் துார்வாரும் ஊழியர்கள், டிரைவர், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
