ADDED : மார் 18, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:அரசு விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் அரசு விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கப்படுவதை கண்டித்தும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் பழநி கோட்ட நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். நேற்று இரவும் போராட்டம் தொடர்ந்து. இதில் சங்க மாநில தலைவர் சண்முகராஜா, மாவட்ட செயலாளர் வேல்முருகன் ,வட்டக் கிளை தலைவர் ரமேஷ் கலந்து கொண்டனர்.