தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்

 காத்திருப்பு போராட்டம்


ADDED : மார் 15, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: மாவட்டத்தில் சாது பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்) திட்டத்தில் 15 வட்டாரங்களில் தலா 2 உதவியாளர்கள் என 30 பேரை நியமிக்க ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் 2025 ஏப்.19ல் உத்தரவிட்டிருந்தார்.

அவர்களில் 9பேரை மட்டும் நியமனம் செய்து விட்டு மீதமுள்ள 21பேரை ஓராண்டு முடிந்த நிலையிலும் நியமனம் செய்யவில்லை.

இதனை கண்டித்தும் தேர்தல் அறிவிப்புக்கு முன் ஆணையர் உத்தரவிட்ட பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் நிரப்ப வலியுறுத்தியும் நேற்றிரவு திண்டுக்கல் கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் அருண்பிரசாத் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் வீர கடம்பகோபு, பொருளாளர் கவிதா பேசினர்.

கலெக்டர் சரவணன் பரிந்துரையில் திட்ட இயக்குனர் கங்காதரணி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us