UPDATED : அக் 16, 2026 12:41 AM
ADDED : அக் 16, 2026 12:38 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி பெரியம்மாபட்டி மருதகாளியம்மன் கோயில் இனாம் நிலம் 6.4 ஏக்கர் குத்தகை ஏலம் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை ரத்து செய்யக்கோரி பூஜாரிகள் குடும்பத்தினர், இனாம் நல விவசாயிகள், குத்தகையாளர்கள் மற்றும் வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கத்தினர் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி தலைமையில் ஹிந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏல ரத்து அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.
