/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் ஓடும் கழிவு நீர்; கொசுக்களால் நோய் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 35 வது வார்டு மக்கள்
/
ரோட்டில் ஓடும் கழிவு நீர்; கொசுக்களால் நோய் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 35 வது வார்டு மக்கள்
ரோட்டில் ஓடும் கழிவு நீர்; கொசுக்களால் நோய் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 35 வது வார்டு மக்கள்
ரோட்டில் ஓடும் கழிவு நீர்; கொசுக்களால் நோய் தொற்று; பரிதவிப்பில் திண்டுக்கல் 35 வது வார்டு மக்கள்
ADDED : ஏப் 27, 2025 04:47 AM
திண்டுக்கல் : துார்வாரப்படாத சாக்கடைகளால் கொசுக்கள் தொல்லை, பயன்பாடற்ற பூங்காங்கள் என பல பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 35வது வார்டு மக்கள்.
திண்டுக்கல் பர்மா காலனி, ராமையா தோட்டம், குருநகர், அண்ணா காலனி உட்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சாக்கடைகள் ஏதும் துார்வாரப்படாமல் உள்ளதால் மழைபெய்தால் கழிவுநீர் ரோட்டிற்கு வந்து விடுகிறது.
கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. சுற்றிய குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தோர் அவ்வப்போது காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கின்றனர்.
கொசு மருந்துகள் அடிப்பதும் குறைவாக இருப்பதால் கொசுக்கள் வாயிலாக நோய் தொற்றுகள் பரவுகிறது.
கால்நடைகள் தாராளமாக சுற்றுவதால் பெரும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நத்தம் ரோட்டோரத்தில் உள்ள பூங்கா , டி.எஸ்., மஹால் பின்புறமுள்ள பூங்காக்கள் பராமரிப்பினறி கிடக்கின்றன. நடைபயிற்சி மேற்கொள்வோர் தொடங்கி குழந்தைகள் வரை பலரும் பூங்காக்கள் சரிவர இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
குப்பைத்தொட்டிகள் இல்லாத மாநகராட்சி திட்டத்தின்படி குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால் பொதுவெளியில் குப்பைகள் கொட்டுவது வாடிக்கையாகிவருகிறது. பல இடங்களில் தெரு விளக்குகள் முறையாக எரியவில்லை. இரவு நேரங்களில் முதியவர்கள், பெண்கள் வெளியே சென்று வர சிரமப்படுகின்றனர்.
கொசுமருந்து அடிப்பதே இல்லை
கார்த்திக், பர்மா காலனி :சாக்கடைகள் துார்வாராமல் இருப்பதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாவதால் குழந்தைகள் அடிக்கடி உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, கொசுமருந்து அடிப்பதே இல்லை.
பூங்காக்களை சரிசெய்ய வேண்டும்
பூவராகவன், பா.ஜ., நகர் தெற்கு துணை த்தலைவர் :பூங்காக்களை பராமரிப்பின்றி உள்ளதால் முதியவர்கள், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். முறையாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தெருவிளக்குகள் பல இடங்களில் எரியவில்லை. இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் பிரச்னை இல்லை
ஜோதிபாசு, கவுன்சிலர், (மார்க்சிஸ்ட்): திண்டுக்கல். பாதாளச்சாக்கடை பணிகள் தற்போது தான் மாநகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னை இதுவரை இல்லை. மழைக்காலத்தில் மழை நீர் தேங்கினாலும் உடனடியாக சென்று விடும்.

