/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் வாரிய ஊழியர்கள் சங்க கூட்டம்
/
குடிநீர் வாரிய ஊழியர்கள் சங்க கூட்டம்
ADDED : டிச 10, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க நிர்வாகி ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் அழகர்சாமி, தலைவர் கணேசன், செயலாளர் அய்யப்பன், பழநி நிர்வாகி கணக்கன்பட்டி துரைச்சாமி கலந்து கொண்டனர்.
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . திண்டுக்கல்லில் டிச. 12 ல் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், ஜன. 29ல் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது.

