/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
பழநியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : ஜன 05, 2025 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோடைகால நீர்த்தேக்கத்தின் அருகே 5 லட்சம் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
பழநி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோடைகால நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்க இயலும். இதன் அருகே 5 லட்சம் லிட்டர் அளவில் சுத்திகரிப்பு நிலையம் ஏற்கனவே அமைந்துள்ளது. இந்நிலையில் மேலும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் நிலையம் அம்ருத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் துரிதமாக நடைபெற்றால் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்.

