/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரையன்ட் பூங்காவில் தண்ணீர் தெளிப்பு
/
பிரையன்ட் பூங்காவில் தண்ணீர் தெளிப்பு
ADDED : மார் 18, 2024 06:58 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் வெளுத்து வாங்கும் கோடை வெயில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க தண்ணீர் பாய்ச்சும் பணி நடக்கிறது.
கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் எதிர்வரும் 61வது மலர் கண்காட்சிக்காக மலர் படுகைகள் தயார் செய்து அதில் 3 கட்டமாக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. கடந்த மாதம் பனியின் தாக்கம் அதிகரித்து நிலையில் பனிப் போர்வை போர்த்தப்பட்டது.
சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையால் மலர் செடிகள் வாடத்  துவங்கியது. இதையடுத்து நாள்தோறும் பிரையன்ட் பூங்கா நிர்வாகம் மலர் நாற்றுக்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் மற்றும் களப் பணியில் ஈடுபடுகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக நடப்பாண்டில் கூடுதல் வெயிலால் செடிகள் பாதிக்காமல் இருக்க நாள்தோறும் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடப்பது குறிப்பிடதக்கது.

