ADDED : பிப் 02, 2026 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் துர்கா பகவதி நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திண்டுக்கல் அனுமந்த நகர் ரயில்வே மேம்பாலத்தில் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நகர் வடக்கு எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார், வி.ஏ.ஓ., ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வினியோகத்துக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

