/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமலை பூங்காவில் ரூ.1.3 கோடியில் தண்ணீர் தொட்டி
/
சிறுமலை பூங்காவில் ரூ.1.3 கோடியில் தண்ணீர் தொட்டி
ADDED : ஜன 30, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலை பல்லுயிர் பூங்காவில் ரூ.1.3 கோடியில் தண்ணீர் தொட்டி அமைப்பதற்கான பணிகள்  தொடங்க உள்ளதாக  வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறை  சார்பில் சிறுமலையில் பொது மக்கள் பொழுதுபோக்கிற்காக ரூ.5 கோடியில் பல்லுயிர் பூங்கா  அமைக்கப்பட்டுள்ளது.  சிறுவர் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, கேண்டீன், உயர்கோபுரம், மர வீடு, மாஸ் கார்டன் உள்ளிட்டவை  அமைக்கப்பட்டுள்ளன.  100 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில்    ரூ.1.3 கோடியில் தண்ணீர் தொட்டி அமைக்க  அரசு   நிதி ஒதுக்கி உள்ளது.   இப்பணிகள் முடிந்ததும் பூங்கா திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

