/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கேயும் காணோம் : டூவீலர்களில் ஹெல்மெட் அணியாது பயணம்: கண்காணிப்பை தீவிரப்படுத்தலாமே போலீசார்

ADDED : மார் 17, 2024 01:19 AM

மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை உட்பட நகர ,ஊராட்சி சாலைகளில் டூவீலரில் பொதுமக்கள் அதிகளவில் பயணம் புரிகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் அதிவேகமாகவும் மூன்று நபர்கள் அமர்ந்தும் பயணிக்கின்றனர்.
இதில் பெரும்பாலானார் ஹெல்மெட் அணிவது கிடையாது. ஹெல்மெட் அணியும்போது விபத்து ஏற்பட்டால் தலைக்காயம் அடைவது குறைந்து, இறப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. ஆனால் இளைஞர்கள் அதி வேகமாக செல்வதால் எதிரே வாகனங்களில் செல்பவர்களும் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் சிறு விபத்து ஏற்பட்டாலும் தலைகாயம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதால் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலும் உயிரிழப்பு ,பலத்த காயம் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே போலீசார் ஹெல்மெட் அணிவதை கண்காணித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.