ADDED : செப் 23, 2025 04:36 AM
அ நிறம் | அளவு
நிலக்கோட்டை: நிலக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் அமை ந்துள்ளது. பழைய கட்டடம் என்பதால் மழை காலத்தில் ஒழுகும் நிலை உள்ளது. பதிவேடுகளை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
கழிப்பறை வசதி இல்லாததால் பெண் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். அலுவலகப் பணிக்காக ஆசிரியர்கள் வரும்போது இடப்பற்றாக்குறையால் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதை கருதி வட்டார வள மைய புதிய கட்டடத்திற்கு வட்டார கல்வி அலுவலகத்தை மாற்ற ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
