ADDED : ஆக 27, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.28
திண்டுக்கல் வத்தலகுண்டு ரோட்டில் ‘சிட்டி ஸ்கொயர்’ நிறுவனம் சார்பில் சிட்டி ஸ்கொயர் கன்வென்ஷன் சென்டர், திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. சிட்டி ஹாஸ்பிடல் இயக்குநர்கள் டாக்டர் முரளிதரன், வனிதா முரளிதரன் தலைமை வகித்தனர். டாக்டர்கள் நவீன்குமார், ஹரிணி, வசந்த ராஜசேகரன், பவளராஜன் சாந்தி, குழந்தைகள் தனுஷா, துரு ஆகியோர் இணைந்து சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
முன்னதாக காலை 9:00 மணிக்கு விவாஹ விநாயகர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. பழனி முருகன் கோயில் குருக்கள் செல்வ சுப்பிரமணியர் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டப திறப்பு விழாவில் அனைவரும் பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு கும்பாபிஷேக பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
