ADDED : அக் 07, 2025 04:34 AM

ஒட்டன்சத்திரம்: வேடசந்துார் வீரா சாமிநாதன்- ஒட்டன்சத்திரம் கே.எஸ்.கே.பி.கணேஷ் வீரமணி இல்ல திருமண வரவேற்பு விழா ஸ்ரீராமபுரம் வெற்றி அரங்கம் கலைஞர் திடலில் நடந்தது. மணமக்கள் ஸ்ரீகாந்த்-வீரவர்ஷ்னியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வாழ்த்தினார்.
மணமக்கள் குடும்பத்தார் வீராசாமிநாதன், வீரா தாமரைச்செல்வி, வீரா சச்சின், கே.எஸ்.கே.பி. கணேஷ் வீரமணி, அமுதா, டாக்டர் விஷ்ணுகுமார் வரவேற்றனர். சத்திரப்பட்டி ராயர் சிட்பண்ட் உரிமையாளர் செந்தில்குமார், ஒட்டன்சத்திரம் கே.டீ.ஆர்.நெய் உரிமையாளர்கள் தர்மராஜ், ஜெகதீசன், தனபாக்கியம் ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் குழந்தைவேல், முருகன், தங்கச்சியம்மாபட்டி கே.வி. ராஜ்குமார், சுதா, முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகானந்தம், பாவாயூர் அப்பாதுரை, அன்னபூரணம், அன்பரசன், முத்துமணி, அபிநயா,கரன், ரவிச்சந்திரன், திவ்யா, அக் ஷரா அஸ்னாசாய், கே.எஸ். நெய் உரிமையாளர் சந்திரசேகரன், விரலி நெய் உரிமையாளர் கே.எஸ்.மணி விஜயன், டி.எஸ்.கே நெய் உரிமையாளர் செந்தில்குமார், வேல்முருகன் என்டர்பிரைசஸ் உரிமையாளர் ஈஸ்வரன், விமலன், அஸ்வன் சிட்ஸ் நிர்வாக இயக்குனர் செல்வராஜூ , முருகேசா டெய்ரி புட்ஸ் உரிமையாளர் முருகேசன், அபூர்வா ஓட்டல் உரிமையாளர் குணசீலன், கே.டீ.ஆர். அன்கோ உரிமையாளர் பார்த்திபன் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.