தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ களைகட்டிய மாட்டுச்சந்தை

களைகட்டிய மாட்டுச்சந்தை

களைகட்டிய மாட்டுச்சந்தை


ADDED : டிச 23, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2024 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: தொடர் மழை காரணமாக பசுந்தீவனங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் ஒட்டன்சத்திரத்தில் மாட்டுச் சந்தை களை கட்டியது.

ஒட்டன்சத்திரம் நாகணம்பட்டி பைபாஸ் ரோட்டில் நகராட்சி மாட்டுச்சந்தை செயல்படுகிறது. வாரந்தோறும் ஞாயிறு மாலை தொடங்கி திங்கள் காலை வரை செயல்படும். உள்ளூர் பகுதியிலிருந்து மட்டும் இன்றி மணப்பாறை, தேனி, கரூர், பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து மாடுகள் பசுக்கள்,கன்றுகள் அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவற்றை கேரள வியாபாரிகள் அதிகமாக வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் பசுந்தீவனங்கள் முளைத்துள்ளன.

இதனால் விவசாயிகள் மாடுகளை அதிகமாக வாங்கிச் சென்றனர். வியாபாரிகளுடன் விவசாயிகளும் அதிகமாக சந்தைக்கு வந்ததால் மாட்டுச் சந்தை களை கட்டியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us